எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஏப்.27 முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப் பணிக்கப்பட்டது.

உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டு தோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண் டே வருகிறது. அதன்மூலம் ஆயு தக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

சீனாவிடம் சி.என்.எஸ். லயனிங் என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப் பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவியத் ஆட்சிக்காலத்தில் வாங்கப் பட்டதாகும்.

 

இந்தப் பணிகள் அங்கு லயனிங் மாகா ணத்தில் உள்ள டாலியன் துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் துறையில் நடந்து வந்தது. அதன் பணிகள் முடிந்து விட்டன.

முறைப்படி நேற்று அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன்மூலம் சீனாவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் எண் ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner