எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெஹ்ரான், ஏப்.28 பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சிஸ்டன்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்டன்-பலூசிஸ்தான் மாகாணத்தின் மிர்ஜாவே நகரில் நடைபெற்ற மோதலில் ஈரான் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

ஈரானுக்கு தென்கிழக்கேயுள்ள சிஸ்டன்-பலூசிஸ் தான் மிகப்பெரிய மாகாணமாகும். இந்த மாகாணத் தில் எல்லை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை ஒட்டி அமைந்துள்ளது.

இப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவ்வப்போது போதை மருந்து கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தளபதி இரண்டு பயங்கரவாதிகளால் இதே மாகா ணத்தில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலையில் எல்லைப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகினர்.

தற்போது ஈரானிய வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு அல்காய்தாவுடன் தொடர்புடைய ஜெய்ஷ்அல்-அதுல் பயங்கரவாதிகளே காரணம் என்று ஈரானிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner