எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நியூயார்க், மே 2- அமெரிக்க மாகாணங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிச வுரி, ஆக்லஹோமா ஆகியவற் றில் நேற்று முன்தினம் கடு மையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டிற்று.

மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று சுழன்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்தன.

பல இடங்களில் கன மழையால் வெள்ளமும் கரை புரண்டு ஓடியது. 3 முறை பலத்த சூறாவளி காற்று வீசி யதை அமெரிக்க வானிலை ஆய்வு மய்யம் உறுதி செய்தது.

ஆர்கன்சாஸ், மிசவுரி, மிசிசிபி மாகாணங்களில் வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் 3 பேர் இறந்தனர்.

ஒரு குழந்தை உள்பட 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாயினர். 72 வயது பெண் ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டார். இந்த சூறாவ ளிக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சூறாவளி காற் றின்போது மின் கம்பங்களும் சாய்ந்ததால் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் சாரமும் துண்டிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner