எழுத்துரு அளவு Larger Font Smaller Font




வாஷிங்டன், மே 4 சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்தது.

ரஷ்ய ஆதரவைப் பெற்றுள்ள சிரியா அதிபர் அல்-அஸாதின் விமானதளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த் தியதற்குப் பிறகு, இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன், அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் உரை யாடினார்.

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு தலைவர் களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

வட கொரியாவால் ஏற் பட்டுள்ள மிக ஆபத்தான சூழல் குறித்து இரு தலைவர்களும் தங்களகு கருத்துகளைப் பரி மாறிக்கொண்டனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால் அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வரும் துயரம் எல்லையை மீறிவிட்டதையும், அதனை உடனடி யாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

சிரியா அரசுக்குச் சொந்தமான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் பேச்சு வார்த்தை, சுமுகமாகவும், மிக நல்ல முறையிலும் நடைபெற்றது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner