எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஹானோவர், மே 8 ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக பாதுகாப்பு கருதி 50,000 பேர் வெளி யேற்றப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஹானோவர் நகரில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட 5 வெடிகுண்டுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் வெடி குண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அந்த நகரத்திலிருந்த 50,000 பேர் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர். இதற்கான திட்டம் ஏப்ரல் மாதத்திலிருந்து செயல் படுத்தப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பணியின்போது ஹானோவர் நகரம் முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப் பட்டது.

வெளியேற்றப்பட்டவர்களின் குதூகலத்திற்காக, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திரைப்படம் திரையிடல், அருங் காட்சியகம் பார்வையிடல் உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 70 ஆண்டுகளுக்கும் மேலானபோதிலும், ஜெர்மனி கிராமப்புறங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner