எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாரீஸ், ஜூலை 17- பயங்கரவாதத் துக்கு எதிராக இரக்கமற்ற போர் நிகழ்த்தி அதனை அழிப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இமா னுவல் மேக்ரான் சூளுரைத்தார்.

நீஸ் நகரில் கடந்த ஆண்டு தேசிய நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அதிபர் மேக்ரான் அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியது: நாம் அஞ்ச வேண்டும் என்றும், அழ வேண்டுமென்றும் பயங்கரவாதிகள் நினைக்கின்றனர். ஆனால் நாம் அச்சமின்றித் திருப்பித் தாக்குவோம்.

நம் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரவாதிக ளுக்கு எதிராக இரக்கமற்ற போர் நிகழ்த்தி அவர்களை அழிப் போம். பாரீஸிலும் பிற இடங் களிலும் பயங்கரவாதத் தாக்கு தல் நிகழ்த்தியவர்களை அழிக் கும் வரை ஓய மாட்டேன் என் றார் அவர். தாக்குதலில் உயிரி ழந்தோர் குடும்பத்தினர், காவல் துறையினர், அவரச உதவிக் குழுவினர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு நீஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பொது மக்கள் மீது மாபெரும் சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற அந்தத் தாக்கு தலில் சின்னஞ்சிறு குழந்தை கள், முதியோர் என 86 அப்பா விப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அதன் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார். தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தேசிய தின நிகழ்ச்சிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கலந்து கொண்டு அவரை வழியனுப் பிய பிறகு மேக்ரான் நீஸ் நகர நிகழ்ச்சிக்கு விரைந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner