எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 19  பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகா ணத்தில், சுதந்திர நாடு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு புது சிக்கல் ஏற் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கில்கிட், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ் தான் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர நாடு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நடைபெறும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீர், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை மனித உரி மைகள் மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலை யில், கில்கிட், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் போல் சிந்து மாகாண பகுதியில் நேற்று சுதந்திர நாடு கோரிக்கையை வலி யுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட் டோர் பேரணியாக சென்றனர். சிந்து மாகாணத்தில் சில தேசிய வாத கட்சிகள் இந்த பேரணியை தலைமை ஏற்றி நடத்தியது.

சீனாவின் பொருளாதார வழிப்பாதை திட்டம், தீவிர வாதம் உள்ளிட்டவற்றிற்கு எதி ராக முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர் சென்றனர்.

பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக போராட்டம் நடைபெற் றுள்ளது. ஏற்கனவே சிக்கலில் தவித்து வரும் நவாஸ் ஷெரிப் புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner