எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜூலை 21 அமெரிக்காவில் எச்1பி விசா பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒ பிரிவு விசா பெற விண்ணப் பிக்குமாறு ஆலோசனை வழங் கப்படுவதாக அமெரிக்க நாடாளு மன்ற மேலவை (செனட்) எம்.பி. சக் கிராஸ்லி கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் திறமையான பணியாளர் களுக்கு அமெரிக்க வழங்கி வரும் எச்1பி விசாவுக்கு அதிபர் டிரம்பின் நிர்வாகம் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பிட்ட எண்ணிக் கையில் மட்டும்தான் எச்1பி விசா வழங்கப்பட்டுகிறது.

இதையடுத்து, எச்1பி விசா பெற விண்ணப்பிக்க முயற்சிப் பவர்களை ஒ பிரிவு விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு ஆலோ சனை வழங்கப்பட்டு வருவதாக இந்திய பத்திரிகைகளில் அண் மையில் செய்திகள் வெளியானது. ஒ பிரிவு விசா என்பது தங்கள் துறையில் அதிக திறன் வாய்ந்த வர்கள் மற்றும் தாங்கள் சார்ந்த துறையில் சாதனை படைத்தவர் களுக்கு அமெரிக்கா வழங்குவ தாகும்.

ஒ பிரிவு விசாவுக்கு எவ்வித எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லை. எனவே, எச்1பி விசா கிடைக்காதவர்கள் ஒ பிரிவு விசாவைப் பயன்படுத்தி அமெ ரிக்காவுக்கு வருவதாக கிராஸ்லி குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க செனட்டின் நீதிக் குழுவின் தலைவராகவும் உள்ள அவர் இது தொடர்பாகக் கூறுகை யில், கடந்த 10 ஆண்டுகளில் ஒ பிரிவு விசா பெறுவோரின் எண் ணிக்கை 10 மடங்கு அதிகரித்து விட்டது. எச்1பி விசா கிடைப் பதில் கட்டுப்பாடுகள் உள்ளதால் பலர் ஒ பிரிவு விசா பெறுவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இதனால், அந்த இரு பிரிவு விசா நடைமுறைகளுமே பாதிக்கப்படு கின்றன.

இது தொடர்பான எனது கவலையை உள்நாட்டுப் பாது காப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner