எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஇஸ்லாமாபாத், ஜூலை 21 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்திவருவதாக இஸ்லாமா பாதில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை தொடர்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை யும் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசியா மற்றும் சார்க் அமைப்புக்கான பாகிஸ்தான் பொது இயக்குநர் முகமது ஃபைசல், ஜே.பி.சிங்குக்கு அழைப்பாணை அனுப்பி புதன் கிழமை நேரில் வரவழைத்தார். இந்நிலையில், வியாழக்கிழமை யும் அவரை வரவழைத்து, போர் நிறுத்த ஒப்ந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறிய ஃபைசல், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானின் நிகியல், நெஸாபிர் பகுதிகளில் இந்திய ராணுவம் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம டைந்தனர்.

அப்பாவி பொதுமக்களை குறிவைத்து வேண்டுமென்றே நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், சர்வதேச மனித உரிமை மீறலாகும். கடந்த 2003-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப் பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மீறக் கூடாது. அந்த ஒப்பந்தத்துக்கு உரிய மரியாதையை இந்திய ராணுவம் அளிக்க வேண்டும் என்று ஜே.பி.சிங்கிடம் ஃபைசல் வலி யுறுத்தினார்.

இந்த ஆண்டில் இதுவரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட ருகே 594 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப் பதாகவும் அவர் குற்றம்சாட்டி னார்.

இந்தியா, பாகிஸ்தானுக்கான அய்.நா. ராணுவ கண்காணிப்புக் குழு, தனது கடமையைச் செய்ய இந்திய தரப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சிங்கிடம் ஃபைசல் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, கண்டனம் தெரிவித்து கடந்த 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner