எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகெரிஷ்க், ஜூலை 23- ஆப் கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய வான் வழித் தாக்குதலில் 16 காவலர் கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஹெல்மந்த் மாகாணம் கெரிஷ்க் மாவட்டத்தில் வெள் ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட் டது. தலிபான் பயங்கரவாதிகள் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த மாவட்டத் தில் அமெரிக்கப் படை நிகழ்த் திய வான்வழித் தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் உள்பட 16 காவலர்கள் உயிரி ழந்தனர். மேலும், இரண்டு காவலர்கள் பலத்த காய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.

இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானில் முகாமிட் டுள்ள நேட்டோ படை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்கு தலில் தவறுதலாக ஆப்கன் வீரர்கள் உயிரிழந்தது வருத் தத்திற்குரியது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் பாதிக்கப் பட்டுள்ள அவர்களின் குடும் பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எதனால் இந்த தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நேட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சென்ற பிப் ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தா னில் சங்கின் பகுதியில் அமெ ரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner