எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஜெருசலம், ஜூலை 24- ஜெருச லேமில் உள்ள புனிதத் தலம் அருகே இசுரேல் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் மேலும் இரு பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங் களில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 8ஆக அதிகரித்தது.
ஜெருசலேம் வன்முறை குறித்து இசுரேல் பிரதமர் பெஞ் சமின் நெதன்யாஹு ஞாயிற் றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, அவசர ஆலோசனை நடத்தி னார்.

ஜெருசலேம் புராதன நகரப் பகுதியில் யூதர்களின் மலைக் கோயில் அங்கு அமைந்துள்ளது. அதே பகுதியில் இசுலாமியரின் புனிதத் தலமான அல்அக்ஸா மசூதியும் அமைந்துள்ளது.

அந்தப் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் இரு இசுரேல் காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மசூதியிலி ருந்து ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண் டும் மசூதியை நோக்கித் தப் பியோடினர் என்று காவல்துறையினர் கூறினர். தாக்கிய நபர்க ளைத் துரத்திச் சென்று காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மசூதி நுழைவு வாயில் பகுதி யைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட் டன. மேலும் மசூதிக்குச் செல் பவர்கள் முழு உடல் சோத னைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கும் விதத்தில் சோத னைச் சாவடிகள் அமைக்கப் பட்டன.

சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு தொழுகைக்குச் செல் வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வீதியிலேயே தொழுகை நடத்தினர். ஆயினும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணிப்பு ஏற்பாடுகளை யும் இசுரேல் அரசு அதிகரித்து வருகிறது.

“புனிதத் தலம்” அருகே இசுரேலின் ஆதிக்கம் அதிகரிக் கும் வகையில் சோதனை ஏற் பாடுகள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாகக் கைவிட்டு, பழைய முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் ஜெருசலேம் முஃப்தி ஷேக் முகமது ஹுசேன் கூறினார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்குக் கரை பகுதியில் இசுரேலி குடி யிருப்புப் பகுதியில், யூதரின் வீட்டுக்குள் புகுந்து பாலஸ்தீன இளைஞர் நிகழ்த்திய கத்திக் குத்து தாக்குதலில் மூவர் உயி ரிழந்தனர்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் காவல்துறையினருடன் நிகழ்ந்த மோதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த னர். ஏராளமானோர் காயம டைந்தனர்.

இந்த நிலையில், 3 யூதர் களைக் கொன்ற பாலஸ்தீன இளைஞரின் கிராமத்தை துண் டிக்கும் நடவடிக்கையை இசு ரேல் ராணுவம் தொடங்கியது. அப்போது ராணுவத்தினர் மீது பாலஸ்தீன் இளைஞர்கள் பெட் ரோல் குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நிலவியது. கிழக்கு ஜெருசலேம் பகுதியிலும் இசு ரேல் காவல்துறையினர் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. கல் வீச்சில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர். மேற்கு கரை, ஜெருசலேம் இடையேயான கலந்தியா பாலம் அருகே நிகழ்ந்த மோத லில் 8 பாலஸ்தீனர்கள் காயம டைந்தனர்.

கிழக்கு ஜெருசலேம் பகுதி யில் காவல்துறையினர், பாலஸ் தீனர்கள் மோதலில் காயம டைந்த ஒருவர் பின்னர் மருத்து வமனையில் உயிரிழந்தார். அதே பகுதியில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீச முயன்றபோது அது அவரு டைய கையில் உள்ளபோதே வெடித்து அவர் உயிரிழந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner