எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக.9 தேடு பொறியான கூகுளின் தாய் நிறு வனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டாமோர். இவர் கடந்த வாரம் நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் நிறுவனத்தில் ஆண் -பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்குத் தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார்.

ஜேம்ஸ் டாமோரின் இந்த மெமோ டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜேம்ஸ் நிறு வனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவரை வேலையை விட்டு நீக்கியது கூகுள். அவர் நிறுவனத்திடம் முறைப்படி இந்த பிரச்சினைக்கான தீர்வு காண தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு கூகுள் நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப்பற்றி பேச முடியாது என கூறிவிட்டது.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில்,

ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி எழுதியுள்ளார் அதனால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் டெனிலே பரவுன், ஜேம்ஸ் நிறுவனத்தில் ஆண்- -- பெண் இடையே பாகுபாடு காட்டுவதாக தவறாக நினைத்து கொண்டிருக்கிறார். இங்கு அது போன்று எந்தப் பா குபாடும் காட்டுவதில்லை என தெரிவித்துள்ளார்.


மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சோதனை:

400 பேர் கைது

கோலாலம்பூர், ஆக.9 மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (8.8.2017) தீவிரவாத தடுப்பு சோதனையில் காவல்துறையினர் ஈடு பட்டனர். அப்போது வங் காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner