எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குவாம், ஆக.11 அமெரிக்காவின் அதி காரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்கும் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டு, பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது வட கொரியா.

மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதி யில் உள்ளது குவாம் தீவு. இது அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதியாகும். வட கொரியாவிலிருந்து சுமார் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவை ஏவுகணை கொண்டு தாக்குவதற்கான திட்டத்தை அந்த நாடு வெளியிட்டிருக்கிறது.

வடகொரியாவின் அரசு தொலைக் காட்சியில் விரிவான வரைபடங் களுடனும், விளக்கங்களுடனும் தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டது.

குவாம் தீவு தன்னாட்சிப் பிர தேசமாக உள்ள போதிலும், அமெ ரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியிலிருந்து எழக்கூடிய எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க குவாம் தீவில் அமெ ரிக்காவின் முப்படைகளும் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மிக நீண்ட தொலைவு பறந்து தாக்குதல் நடத்தும் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட அதிகத் திறன் கொண்ட பாதுகாப்பு அரண் அமெரிக்காவால் அங்கு உரு வாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குவாம் தீவைத் தாக்கும் விரிவான திட்டத்தை வட கொரியா வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து வட கொரிய ஏவுகணைப் பிரிவு தளபதி கிம் ராக்-கி யோம் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் உக்கிரத் தாக்குதல் அறிவிப்பு வெறும் பிதற்றல். நடுநிலை, நியாய உணர்வு இல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் துல்லியமாகத் தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்திக்குள் திட்டம் பூர்த்தியாகிவிடும்.

குவாம் தீவுத் தாக்குதலின்போது ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகள் செலுத்தப்படும். அந்த ஏவுகணைகள் ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கோயிச்சி பகுதிகளின் வான் எல்லைக்கு மேல் பறந்து சென்று குவாம் தீவைத் தாக்கும். அந்த ஏவுகணைகள் விண்ணில் 17 நிமிடங்கள், 45 விநாடிகளுக்குப் பறந்து செல்லும்.

விண்ணில் செலுத்தப்பட்டதும், 3,356.7 கி.மீ. தொலைவு பறந்து குவாம் தீவிலிருந்து 30 கி.மீ. முதல் 40 கி.மீ. தொலைவில் கடலில் விழச் செய்வோம். வேண்டுமானால் இலக்கை அதிகரிக்கச் செய்ய முடியும்.

இந்த விரிவான தாக்குதல் திட் டம் அதிபர் கிம் ஜோங்-உன்னின் பரி சீலனைக்காக அளிக்கப்பட உள்ளது. அவரது கட்டளைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் என்று வடகொரிய பாதுகாப்புப் படைகளின் ஏவுகணைகள் பிரிவு தளபதி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner