எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 37 பேர் சாவு

பியூர்டோ, ஆக.18 வெனிசுலாவில், சிறைச் சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அமேசானாஸ் மாகாணம், பியூர்டோ அயாசுசோ நகரில் அமைந்துள்ள சிறைச் சாலையில், செவ் வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதி காலை வரை கலவரம் நீடித்தது.

இந்தக் கலவரத்தில் 37 பேர் படுகொலை செய்யப் பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து சிறை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் தொண்டு நிறுவனங்கள் கூறுகையில், கலவரத்தில் உயிரிழந்த அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் என்று தெரிவித்தன.

அந்தச் சிறையில் கைதிகளை 48 மணி நேரம் வரை தங்கவைப்பதற்கான வசதிகளே உள்ளதாகவும், எனி னும், 4 ஆண்டுகளுக்கும் மேல் சிறைக் கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்ததே கலவரத்துக்குக் காரணம் எனவும் அந்த அமைப்புகள் கூறின.

 


 

ஸ்பெயின்: நடுக்கடலில்

600 அகதிகள் மீட்பு

ஸ்பெயின், ஆக.18 மொராக்கோ நாட்டிலிருந்து அய் ரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி கடல் வழியாகச் சென்று, நடு வழியில் சிக்கித் தவித்த சுமார் 600 அகதிகளை கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் கடல் கண்காணிப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்தப் படையினர் கூறுகையில்,

ஜிப்ரால்டர் சந்தியிலிருந்து 424 அகதிகளையும், மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 169 அகதிகளையும் மீட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மட்டும் சட்ட விரோதப் படகுகள் மூலம் 9,000 அகதிகள் ஸ்பெயின் நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner