எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மலாலாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம்

லண்டன், ஆக.20 பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலா பெண்கள் கல்விக்காக போராடி வருகிறார். இத னால் அவர் தீவிரவாதிகளின் கோபத்திற்கு உள்ளானார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொல்ல முயன்றனர். இத்தாக்குதலில் உயிர் தப்பிய அவர் தற்போது லண்டனில் வசித்து வரு கிறார். கடந்த 2014- ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மலாலாவுக்கு, இங்கிலாந்தில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக அவர் கடுமையாக உழைத்து வந்தார்.

அவருடைய விடா முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில அவருக்கு இடம் கிடைத்துவிட்டது. அவர் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதார துறையை தேர்வு செய்து உள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனக்கு இடம் கிடைத்திருப்பது குறித்து மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


டோங்கா தீவில் நிலநடுக்கம்

டோங்கா, ஆக.20 பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு டோங்கா. நேற்று அதிகாலை அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பூமி குலுங்கியது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மய்ய அதிகாரிகள் கூறுகையில்,

இந்த நிலநடுக்கம் சுமார் 6.4 ரிக்டர் அளவில் பதி வாகியுள்ளது. பசிபிக் கடலில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் இது உருவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என தெரி வித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner