எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக.28 இந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லை விவகாரத்தில், பிரச்சினைக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சிக்கிம் மாநில எல்லையான டோக்லாம் பகுதிக்கு சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதால், அப்பகுதியில் இந்தியாவும், சீனாவும் படைகளை நிலை நிறுத்தியுள்ளன. இந்த விவகாரத்தால் இருநாடுகளிடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.

பிடிஅய் செய்தி நிறுவனம்

இந்நிலையில் வாசிங்டனில் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் இது தொடர்பாகக் கூறியதாவது:

இந்தியா- சீனா இடையிலான டோக்லாம் எல்லைப் பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. எல்லைப் பிரச் சினையைத் தீர்க்க இருநாடுகளும் பேச்சு நடத்தவேண்டும் என்பதே அமெரிக்காவின் கருத்து. அதே நேரத்தில் எல்லையில் பிரச்னை ஏற் படுவதற்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்.

இந்தியா, சீனா மட்டுமல்லாது பூடானுக்கும் டோக்லாம் பகுதியில் முக்கியப் பங்கு உள்ளது. அந்நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா பேசியுள்ளது. இந்தியா விரும்பினால் இந்த விவகாரத்தில் உதவ அமெரிக்கா தயாராகவே உள்ளது என்று கூறி யுள்ளோம். இப்போது அங்கு நிலவி வரும் சூழ்நிலைகளை மட்டும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அணு விநியோக நாடுகள் கூட் டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சீனா பிடிவாதம்

அணு விநியோக நாடுகள் கூட்ட மைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உறுப்பு நாடுகள் அனைத்து ஆதரவு அளித்தால் மட்டுமே என்எஸ்ஜி-யில் புதிய நாட்டைச் சேர்க்க முடியும். அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத இந்தியாவை சேர்க்கக் கூடாது என்பதில் சீனா தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை அதிகாரிகள் பிடிஅய் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

இந்தியாவை என்எஸ்ஜி-யில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். விரைவில் என்எஸ்ஜி கூட்டம் நடை பெறவுள்ளது. என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவது இந்தியாவுக்கு மட்டுமல்லாது, அமெரிக்காவுக்கும் பல வழிககளில் நன்மையளிக்கும். இது தொடர்பாக அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் ஏற் கெனவே பேசியுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner