வாசிங்டன், செப்.2 இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்ய இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக இருப்பதால் அப்பதவிக்கு கென்னத் ஜஸ்டெரின் பெயரை அந்நாட்டு அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்ய இருக்கிறார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. கென்னத் ஜஸ்டெர், கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் பதவி வகித்தார்.
கராச்சியில் கனமழை-வெள்ளம்: 7 குழந்தைகள் உட்பட 23 பேர் சாவு
இசுலாமாபாத்,செப்.2 பாகிஸ்தானில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 23 பேர் இறந்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் கடந்த புதன் கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
மழை வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.
பிரதமர் ஷாகித் ககான் அப்பாசியின் ஆணையின் பேரில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மோட் டார் மூலம் தெருக்களில் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கப்பல் படையினர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.