எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செயின்ட் லூய்சு, செப். 3- அமெரிக்காவின் பல மாநிலங் களில் நீட்டை எதிர்த்தும், அனிதாவுக்கு மரியாதை செலுத்தியும் போராட்டங்கள் நடை பெற்றன. மோடி அரசைக் கண்டித்து, தமிழக அரசின் அடிமைத்தனத்தை எதிர்த்துப் பல அமெரிக்க வாழ் தமிழர்கள் கொந்தளித்து உணர்ச்சிகளைக் கொட்டினர் .முகநூல், சமூக வலைத் தளங்கள் அவர்களது ஆதங்கத்தையும் மோடி எதிர்ப் பையும், பார்ப்பனீய சூழ்ச்சியையும் புரட்டி எடுத்தன.

செயின்ட் லூய்சு, டெக்சாசு, அட்லாண்டா, நியூ ஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, சிகாகோ போன்ற இடங்களில் மெழுகு வர்த்தி ஒளிப்போராட்டம் நடந் தது. நியுஜெர்சியில் வழக்குரைஞர் வீரமர்த்தினியின் மகள் வழக்குரைஞர் கனிமொழி நீட் பற்றி நன்கு எடுத் துரைத்தார்!

பல குடும்பங்கள் வந்து பங்கேற்றன. வேண்டாம், வேண்டாம் நீட் வேண்டாம், கல்வியை மாநில உரி மையில் கொண்டு வா என்று முழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner