சிட்னி, அக்.8 ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற் கரையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டீஷ் தீவுகளின் மக்கள் ஒன்று கூடி ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கங்களை ஊழல் செய்து கைப்பற்றத் துடிக்கும் அதானிக்கு வழங்கக்கூடாது என்று கூறி ஆஸ்திரேலியாவில் செயல் பட உள்ள அனைத்து அதானி நிறுவனத் திட்டங்களையும் நிறுத்தக்கோரி மனிதச் சங்கிலி மற்றும் ஒன்று கூடல் மூலம் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அதானியின் திட்டங்களை நிறுத்து என்று ஆங்கிலத்தில் ஷிtஷீஜீ ணீபீணீஸீவீ என்ற சொல்லை உருவாக்கி சுமார் 8 மணி நேரம் கடுமையானவெயிலில் கூடி நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதானியின் திட்டங்களும் ஊழல் களும் என்ற பெயரில் அதானி நிறு வனம் மனிதத்தன்மையற்று, சுற்றுப் புறச்சூழல் குறித்து சிறிதளவுகூட அக் கறையில்லாமல் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள், அதன் மூலம் நடைபெற்ற பல லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் ஆஸ்திரேலிய ஊடகமான ஏ.பி.சி மற்றும் 4 கார்னர் போன்றவை காணொலிகளாகவும், எழுத்து வடிவிலும் பதியவிட்டிருந்தன. இதனை அடுத்து ஆஸ்திரேலியா மட்டு மல்லாது அதன் அருகில் உள்ள நாட்டு மக்களும் அதானியை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதானி நிறுவனம் ஆஸ்திரேலியா வில் துவங்கும் நிலக்கரி சுரங்கத் திட் டத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல் கடல்வாழ் பவழப் பாறைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற் படும் என்பது குறிப்பிடத்தக்கது.