எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனின் ஒரு முக்கிய இடத்தில் யூதர்களின்  ஃகோலொ காஸ்ட் நினைவகம் உள்ளது. அங்கு பல்வேறு கூட் டங்கள் நடை பெறும். சனவரி 25 ஆம் நாள் உலகில் நடை பெறும் இன அழிப்புகள் பற்றியும், அதற்கான நீதி தேடும் வழி முறைகளும் ஆராயப்பட்டன. முக்கியமாக இலங்கையில் நடை பெற்ற போர்க்குற்றங்கள், அது பற்றிய நீதி தேடல் பற்றிப் பேசப்பட்டது.

அய்க்கிய நாட்டு இலங்கை நீதிநிலை நாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் யாஸ்மின் சூக்கா, ஸ்பெயின் நாட்டின் முக்கிய மனித நேயப் பற்றாளர் கார்லோசு கேசுட்ரோசேனா, இங்கிலாந்தின் பிரான்சிசு ஃகேரிசன் அம்மையார் மற்றும் ஈழத்தில் சிறையிலிருந்து அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ஈழப் பத்திரிக்கையாளர் டிசநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

யாஸ்மின் சூக்கா அம்மையார் தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவால் உருவாக்கப்பட்ட நல்லிணக்கக் குழு உறுப்பினராக இருந்தவர். சூடான், சியரி லியோன் மற்ற நீதி நிலை நாட்டும் குழுக்களிலும் இருந்தவர். அவரது பங்களிப்பு தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஜெனிவாவில் இலங்கைப் போர்க்குற்ற ஆராய்வுக் குழு உறுப்பினராக இருந்து இன்றும் தொடர்ந்து பேசி வருபவர்.

இங்கிலாந்தின் பி.பி.சி. செய்தியாளராகப் பல்லாண்டு இருந்து, மற்றும் பல நிறுவனங் களிலும் பொறுப்புகளிலுமிருந்த பிரான்சிசு ஃகேரிசன்  "இறந்தவர்களை இன்னும் எண்ணு கின்றோம்" என்ற ஈழப் படுகொலை பற்றிய நூலை எழுதியவர்.

தற்போது என்ன நடக்கின்றது? இன்னும் என்ன செய்ய வேண்டும் என்ற மய்யக் கருத்துடன் அங்கு வந்திருந்த பல மனிதநேயப் பற்றாளர்கள்  - அமெரிக்க அரசு சார்ந்தோ ருக்கும் மற்றும் செய்தி, மனித உரிமை நிறு வனங்களுக்கும் புலப்படுத்தும் வண்ணம் பேசி னார்கள்.

அம்மையார் யாஸ்மின் சூக்கா, பேராசிரியர் நீதியரசர் கார்லோசு ஆகியோருக்கு தந்தை பெரியார் பற்றியும், நமது மனித நேய சாதி ஒழிப்பு பற்றியும் சொல்லிப் புத்தகங்களைக் கொடுத்தேன். மகிழ்வுடன்  ஏற்றுக் கொண் டார்கள்.

- சோம.இளங்கோவன்

பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா.