எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், பிப். 27- கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அண்டை நாடான தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தினார். தென்கொரியாவுக்கு ஆதர வாக அமெரிக்கா நேசக்கரம் நீட்டியதும், வாசிங்டனையும் மிரட்டும் விதத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோத னைகளை நடத்தினார்.

மேலும் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்பை சீண்டும் விதமாக பேசி வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்பி அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தென் கொரியாவுக்கு போர் பயிற்சியும் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து இப் பகுதியில் கடந்த ஒரு வருடமாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆனால், சமீபகாலமாக கிம் ஜாங் அன்னின் போக்கு மாறத் தொடங்கி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் நட் புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அய்.நா. விதித்த பல்வேறு பொருளா தார தடைகள் காரணமாக வடகொரியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப் படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட் டியில் தென்கொரியா, வடகொரியா அணிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே அணியாக பங்கேற்றதை கூறுகின்றனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2010ஆ-ம் ஆண்டு 50 தென்கொரியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயல்பட் டவர் என்று கூறப்படும் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் கலந்துகொண்டு வியப்பை ஏற்படுத்தினார். இது அமெ ரிக்காவுடன், வடகொரியா நேசக்கரம் நீட்ட விரும்புவதையே காட்டுகிறது என்று சர்வதேச அரசியல் பார்வையா ளர்கள் கருதுகின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவின்போது சிறப்பு விருந் தினர்களுக்கான பகுதியில் கிம் யோங் சோல், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் கொரிய தீப கற்பத்துக்கான அமெரிக்க ராணுவ தள பதி வின்சென்ட் புரூக்ஸ் ஆகியோரின் அருகில் அமர்ந்திருந்ததும், விழாவில் தென்கொரியாவின் தேசிய கீதம் இசைக் கப்பட்டபோது அவர் எழுந்து நின்று மரியாதை செய்ததும் இதற்கு உதாரண மாக காட்டப்படுகிறது.

வடகொரிய தூதர் கிம் யோங் சோல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னையும் சந்தித்து பேசினார். அப்போது கிம் யோங் சோல், வடகொரிய தலைவர் அமெரிக் காவுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், இதற்காக தாராளமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு மூன் ஜே-இன் அமெரிக்கா வும், வடகொரியாவும் கொரிய தீபகற் பத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படைப்பூர்வமாக தீர்வு காணவேண்டும் என்று யோசனை தெரி வித்தார்.

ஏற்கெனவே தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது நாட்டுக்கு வரு மாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் மூலம் தற்போது அடுத்தகட்ட முயற் சியை வடகொரியா மேற்கொண்டிருப் பது அரிதானதொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்கா, -வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நில வும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.