எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீனாவில் படகு கவிழ்ந்த 17 பேர் உயிரிழப்பு

பீஜிங், ஏப். 22- சீனாவின் குய்லின் பகுதியில் தாவோஹு வாஜியாங் என்னும் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

இதனிடையே, இந்த ஆற்றில் நேற்று படகு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த போட்டி குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக் கப்பட்டவில்லை.

இந்நிலையில், படகு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி ஓட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீ ரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ் கின. இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனை வரும் ஆற்றில் மூழ்கினர். உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதை யடுத்து இந்த படகு போட்டிக்கு ஏற்பாடு செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராகிறார், நோர்வுஸ் மாமேடோவ்

பாக்கு, ஏப். 22- ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பி யன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கிழக்கு அய்ரோப்பாவுக்கும் தென் மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கஸ் மலைப்பகுதியில் அசர் பைஜான் நாடு அமைந்துள்ளது.

சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் இந்நாட்டின் முக்கிய வருமானமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கருதப்படுகிறது.

இந்நாட்டின் அதிபராக இல்ஹாம் அலியேவ் பொறுப் பேற்றுள்ளார். அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றிவந்த நோர்வுஸ் மாமேடோவ் என்பவரை புதிய பிரதமராக நியமிக்க அசர்பைஜான் நாட்டின் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

 


காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்

லண்டன், ஏப். 22- காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இங் கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார்.

வயது முதிர்ந்தநிலையில், அவர் தனது இடத்துக்கு மகனும், இளவரசருமான சார்லஸ் வர வேண்டும், அது தனது மனமார்ந்த விருப்பம் என்று கூறி இருந்தார். அதற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், கனடா பிரதமர் ஜஸ் டின் ட்ரூடோவும் முதலில் ஆதரவு தெரிவித்தனர்.

காமன்வெல்த் அமைப் பின் தலைவர் பதவி, பரம்ப ரையாக ஒரு குடும்பத்துக்கு சொந்தம் கிடையாது. எனவே ராணி மறைந்தாலும் கூட, தானாக இந்தப் பதவி இளவ ரசர் சார்லஸ்சை வந்து அடைய முடியாது. 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சுழற் சியில் தலைவர் பதவிக்கு வர முடியும்.

இந்த நிலையில் ராணியின் விருப்பம் குறித்து, லண்டன் வின்ட்சார் கோட்டையில் மூடிய அறையில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவா தித்தனர். இதில் காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலை வராக இளவரசர் சார்லஸ்சை ஏற்பது என முடிவு செய் யப்பட்டது.

இது தொடர்பாக 53 உறுப்பு நாடுகளின் தலை வர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள், காமன்வெல்த் மற்றும் அதன் மக்களை வென்றெடுப்பதில் ராணியின் பங்கை அங்கீகரிக் கிறோம் என்று கூறி உள்ளனர்.டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்

பெய்ரூட், ஏப். 22- உள்நாட்டுப் போர் நடந்து வருகிற சிரியா வில், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

அவர்கள் இப்போது அந்த இடத்தை அதிபர் பஷார் அல் ஆசாத் அரசிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேற சம்மதம் தெரிவித்து உள்ளதாக சிரிய அரசு தொலைக்காட்சி நேற்று கூறியது.

அங்கு இருந்து வெளியேறு கிற கிளர்ச்சியாளர்கள், துருக்கி எல்லைப்பகுதிக்கு செல்வார் கள். அந்த வகையில் 3 ஆயி ரத்து 200 கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள இத்லிப், ஜராப்ளஸ் பகுதிகளுக்கு செல்வதற்கான வாகன வசதிகளை சிரியா அரசு ஏற்பாடு செய்து வருவ தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது கிழக்கு கூட்டாவின் பெரும்பான்மை பகுதியை மீட்டெடுத்து விட்ட பஷார் அல் ஆசாத் அரசுக்கு மேலும் ஒரு வெற்றியாக அமைகிறது.அணு ஆயுத சோதனை நிறுத்தம் உலக நாடுகள் வரவேற்பு

பியாங்யாங், ஏப். 22- அய்க்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவு கணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடு களை அதிர வைத்த வடகொ ரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார். சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடை பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென் கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங் களை உயர வைத்தார். பேச்சு வார்த்தைக்கு வந்த தென் கொரிய பிரதிநிதிகளிடம் இப் போதைக்கு ஏவுகணை சோத னைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது. கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் பச்சைக் கொடி கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெ ரிக்கா - வடகொரியா இடையே யான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வடகொரி யாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை கள் நடைபெறாது என அந் நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மய் யங்களை மூட அதிபர் உத் தவிட்டுள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அறி விப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளார்.

இதேபோல், அய்ரோப்பிய யூனியன், வடகொரியாவின் அண்டை நாடான சீனா மற் றும் ரஷ்யா உள்ளிட்ட நாடு கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner