எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யாங்கூன், ஏப். 30- மியான்மா நாட்டில் ரோகிங்கியா முஸ் லிம் இன மக்கள் சிறுபான்மை யினராக உள்ளனர். அவர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக் குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அந்த இன மக்கள் அருகில் உள்ள வங்காள தேசத்திற்கு அகதிகளாக ஓடினார்கள்.

இந்த சம்பவம் உலக நாடு களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகள் கண்டனம் கார ணமாக தாக்குதல் நடவடிக்கை கள் குறைந்து தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு மியான்மா பகுதியில் உள்ள கச்சின் பகுதியில் ராணுவத்தி னர் அங்குள்ள சிறுபான்மை யின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த பகு தியில் கச்சின் என்ற தனி இன மக்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் கிறித்துவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தாங்கள் வசிக்கும் பகு தியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அவர்களை ஒடுக் கும் விதமாக ராணுவம் தாக்கு தல் நடத்தியது.

விமானம் மூலம் குண்டு வீசியதுடன், பீரங்கி தாக்குதல் களும் நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் மேலும் அதி கரிக்கலாம் என்ற பயத்தில் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

அவர் சீனாவுக்குள் நுழை வதற்காக எல்லைப் பகுதிக்கு சென்றனர். ஆனால் சீன ராணு வம் அவர்களை தங்கள் நாட் டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் எல்லையிலேயே எந்த வசதியும் இல்லாமல் தங்கி உள்ளனர்.

அய்.நா. சபையில் அவர்க ளுக்கு உதவி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வடக்குப் பகுதியில் உடனே அமைதியை ஏற்படுத்த வேண் டும் என்று மியான்மா அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner