எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்னல் தாக்கி 14 பேர் பலி

தாகா, ஏப். 30- வங்காளதேச நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், சிராஜ்கஞ்ச், சுனம்கஞ்ச், மகுரா, நோகாலி மற்றும் ரங்கமதி மாவட்டங்களில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 14 பேர் உடல் கருகி பரி தாபமாக பலியாகினர். இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட பலரும் அடங்குவர்.

பலத்த மழையை தொடர்ந்து ஜமுனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 40 பேர் பலி

பமாகோ, ஏப். 30- மாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியா ளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய் தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டி ரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக் களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப் பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.மின்னல் தாக்கி 14 பேர் பலி

தாகா, ஏப். 30- வங்காளதேச நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், சிராஜ்கஞ்ச், சுனம்கஞ்ச், மகுரா, நோகாலி மற்றும் ரங்கமதி மாவட்டங்களில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 14 பேர் உடல் கருகி பரி தாபமாக பலியாகினர். இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட பலரும் அடங்குவர்.

பலத்த மழையை தொடர்ந்து ஜமுனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 40 பேர் பலி

பமாகோ, ஏப். 30- மாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியா ளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய் தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டி ரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக் களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப் பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner