எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், ஏப். 30- 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத் தில் அணு ஆயுத சோதனை களை கைவிடுவது என்பது தான்.

அய்.நா. உள்பட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை களை நடத்தியது தான் வட கொரியா மீது அமெரிக்கா உள் ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு காரணமாக இருந் தது. எனவே அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரி வித்தார்.

இந்நிலையில், எங்கள் மீது தாக்குதல் நடத்த மாட் டோம் என அமெரிக்கா உறு தியளித்தால் நாங்கள் அணு ஆயுதத்தை கைவிட தயார் என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, கிம் ஜாங் உன் கூறுகையில், வட, தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந் துள்ளது. கொரியா  மீது தாக் குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தால் நாங்கள் அணு ஆயுதத்தை கைவிட தயார் என தெரி வித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner