எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், மே 14- சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன் றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப் படுகிறது.

தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவு கள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளி யாகி இருந்தது.

அதில் அமைச்சர் கூறுகையில், தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என்றார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவில் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்

பீஜிங், மே 14- சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

இந்தக் கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப் பட்டது.

கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020ஆ-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

சீனா 3ஆ-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030ஆ-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner