எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடகொரியா, மே 14- வடகொ ரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மய் யங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடி வெடுத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வடகொரிய வெளியுறவு அமைச்சர் கங் கியுங்-வா இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு (கேசி என்ஏ) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வடகொரியாவில் அணு ஆயுத சோதனைக் கூடங்கள் மற்றும் அணு ஆயுத ஆய்வு மய்யங்கள் அனைத்தும் முற்றி லுமாக அழிக்கப்படும். இது வரை அணு ஆயுதச் சோதனைக் காகப் பயன்படுத்தப்பட்ட இடங் கள் அனைத்தும் சீல் வைக்கப் படும். இதற்கான தொழில்நுட் பப் பணிகள் மே 23-ஆம் தேதி தொடங்கப்படும். வரும் செப் டம்பர் மாதத்துக்குள் அனைத் துப் பணிகளும் முடிந்து, அணு ஆயுத மய்யங்கள் எதுவுமே இல்லாத நிலையை வடகொ ரியா எட்டிவிடும் என்றார் அவர்.

வடகொரியாவின் வடகிழக் குப் பகுதியிலுள்ள பங்கியி-ரி என்ற இடத்தில்தான் அந்நாட் டின் முக்கியமான 6 அணு ஆயுத சோதனை மய்யங்களும் உள்ளன. பூமிக்கு அடியில் சுரங்கங்களை அமைத்து இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சுரங்கங்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் அழிக்க இருப்பதாக வடகொரியா கூறி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner