எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்க்கிய நாடுகள் கலாச்சாரம் மற்றும் மனித உரிமை தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட மிஸ் அரேபியா பட்டம் வென்ற இன்ஹாஸ் அல்ஹாம் சமூக நீதி என்ற தலைப்பின் கீழ் அம்பேத்கர் குறித்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது உரையில் மனிதர்களுக்குள் இருக்கும் தீண்டாமைப் பேதம் என்பது மனிதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும் - நாம் உலகில் உள்ள அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது - இந்தியாவில் சக மனிதர்களைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, அவர்களின் நிழல் பட்டால் தீட்டு, தண்ணீர் குடித்தால் தீட்டு, அவர்கள் சமூகத்தில் சிறந்த கல்வியாளர்கள், செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களை தீண்டாமை நோக்கோடு பார்க்கும் அவலம் இன்றளவும் உள்ளது - இதை எதிர்த்து களம் கண்டவர் டாக்டர் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர். நான் இந்தியாவைப் பற்றி படிக்கும் போது அங்கு நிலவும் தீண்டாமை குறித்த செய்திகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது,

இது தொடர்பாக நான் மேலும் ஆழமாக படித்த போது அம்பேத்கர் குறித்து படிக்க ஆரம்பித்தேன். நூற்றாண்டுகளாக கடுமை யான தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வந்த ஒருகுடும்பத்தில் இருந்து வந்து தனிப்பெரும் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதுமல்லாமல் தனக்கு ஏற்பட்ட கொடுமை பிறருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை மறந்து மக்களுக்காக இறுதிவரை போராடியதைப் படித்த போது அவரின் உன்னதத்தன்மையை உணர்ந்தேன் - உலகின் பல தலைவர்கள் சுதந்திரம்,உரிமை, வாழ்வாதார, பொருளாதார, நிறவெறி, மதவெறிக்கு எதிராக போராடியுள்ளனர் - ஆனால் சகமனிதர்களாலே வெறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட ஒருவர் பாடுபட்டு அதில் வெற்றிபெற்றார் என்றால் அது அம்பேத்கர் என்று கூறினார். சமூக நீதி தொடர்பாக மேலும் பல தலை வர்கள் குறித்து படித்துவருவதாக கூறினார்.

அவருக்கு அய்க்கிய நாடுகள் மனித உரிமை மற்றும் சமூகநீதி கண்காணிப்பு ஆணையம் சார்பில் அம்பேத்கர் மார்பளவு சிலை ஒன்று வழங்கப்பட்டது,

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner