எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகன் ஹாரி கருப்பர் இனப் பெண்ணை காதலித்து தம்முடைய வாழ்விணைய ராகத்  தேர்ந்தெடுத்துள்ளார்.

மணமக்கள் ஏற்றுக்கொண்ட உறுதி மொழியில் ‘கணவருக்கு கீழ்படிகி றேன்’ என்பதற்கு பதிலாக ‘இருவரும் சமம்’ என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. இளவரசர் ஹாரி, தனது தோழியான மேகன் மெர்கெலை கரம் பிடித்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், சார்லசின் இளைய மகனுமான ஹாரிக்கு 33 வயது. இவர் அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மார்கலை (வயது 36) காதலித்து வந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பிறகு, கடந்த டிசம்பர் மாதம் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் மே 19-ஆம் தேதி திரு மணம் நடைபெறும் என்று அரசு குடும் பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தி ருந்தனர்.

முன்னதாக தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி மணமகள் மார்கலுக்காக காத்திருந்தார்.

வெண்ணிற திருமண உடையணிந்து தேவாலயத்திற்கு வந்த மார்கலை ஹாரி யின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் வரவேற்று, தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார்.

அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் தேவாலயத்திற்குள் குழு மியிருந்தனர். மேகன் மார்க்கலின் முகத் திரையை ஹாரி விலக்கினார். அதனைத் தொடர்ந்து திருமண உடன்படிக்கையை பாதிரியார் வாசித்தார்.

‘கணவருக்கு கீழ்படிகிறேன்’ மாறி

‘இருவரும் சமம்’ இடம் பெற்றது

இங்கிலாந்து அரச குடும்பத்தின் வரலாற்றில் முதன்முறையாக திரு மண உடன்படிக்கையில் ‘கணவருக்கு கீழ்படிகிறேன்’ என்பதற்குப் பதிலாக ‘இருவரும் சமம்’ என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது.

இந்தத் திருமணத்தின் மூலமாக பெர்மிங்ஹாம் அரண்மனையை அலங் கரிக்கும் முதல் கறுப்பின மருமகள் மேகன் மார்க்கல் ஆவார். இத்திருமண விழாவில்  டென்னிஸ் வீராங்கனை செரினா வில் லியம்ஸ், மேகன் மார்க்கலுடன் இணைந்து நடித்த நட்சத்திரங்கள் என ஏராள மானோர் பங்கேற்றனர்.

திருமண விழா முடிந்த பின்னர் பல் வேறு கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு களுக்கு மத்தியில் புதுமண தம்பதியினர் லண்டன் நகரத்தை வலம் வந்தனர்.

இங்கிலாந்து மன்னர் குடும்பத்திலும் பெரியாரின் பாலியல் நீதி வெற்றி பெற்று உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner