எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிட்னி, ஜூன் 10- சிக்கலான உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில், 2008-ஆம் ஆண்டில் இருந்தே முதலிடம் பிடித்து வரும் அய்ஸ்லாந்து இந்தாண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 141ஆவது இடத்தில் இருந்த இந்திய நான்கு இடங்கள் முன்னேறி 137ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது உலகளாவிய சமாதான குறியீட்டின் பன்னிரண்டாவது பதிப்பில் உலகின் எவ்வளவு நாடுகள் குறைவான அமைதியை பெற்றுள்ளது என்பதை இந்த ஆய்வு தெளிவுப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், சமாதான போக்கு, அதன் பொருளாதார மதிப்பு மற்றும் அமை தியான சமுதாயத்தை எவ்வாறு விரி வாக்கம் செய்வது ஆகியவற்றின் மீதான மிக விரிவான தரவு சார்ந்த பகுப் பாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது.

இந்த அறிக்கையின் படி, உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், 141ஆவது இடத்தில் இருந்த இந்தியா 137ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகின் அமைதியான நாடுகள் பட்டி யலில் 2008-ஆம் ஆண்டில் இருந்தே அய்ஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத் தடுத்த அய்ந்து இடங்களை பிடித்துள் ளன. கடந்து அய்ந்து ஆண்டுகளாக அமைதியற்ற சூழல் நிலவும் சிரியா, ஆப்கன், ஈராக், தெற்கு சூடான், சோமா லியா ஆகிய நாடுகள் குறைந்த அமைதி யான நாடுகளாக அதாவது கடைசி இடங்களில் உள்ளன.  உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் 61 சதவீதம் நாடுகள் 2008 முதல் மோச மடைந்துள்ளது.

பொருளாதார தாக்கத்தின் எழுச்சி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செலவி னங்களின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணங்களால், சீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் வன்முறைகளின் காரணங்களால் 2017-ஆம் ஆண்டில் பொருளாதார பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், குறைந்த அள விலான அமைதியான நாடுகளுடன் பொருளாதார செயல்திறனை ஒப்பிடு கையில், மிகவும் அமைதியான நாடு களில் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

கடுமையான சட்டங்கள் மூலம் இந்தியாவில் வன்முறை மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை, சாட், கொலம்பியா, உகாண்டா நாடுகளி லும் வன்முறை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைத்திக் கான மாற்றங்களை பார்க்கும் போது, வேறுபாடுகள் மிகவும் வலுவானதா கவும், அதே சமயம், அமைதியில் முன் னேற்றமடைந்த நாடுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் சீரழிக்கப்பட்ட நாடு களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற் பட்ட பதட்டங்கள், மோதல்கள் மற் றும் நெருக்கடிகள், குறிப்பாக மத்திய கிழக்கில் தீர்க்கப்படாமல் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. இதன் விளை வாக சமாதானத்தில் படிப்படியாக வீழ்ச்சி ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner