எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வியன்னா, ஜூலை 4- ஆஸ்திரியா நாட்டில் ஆண்டுதோறும் அயர்ன் மேன் ஆஸ்தி ரியா என்னும் இரும்பு மனிதர் பட்டத்துக் கான டிரையத்தலான் போட்டி நடைபெறும்.

3.8 கிலோமீட்டர் தூர நீச்சல், 180 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் முழு மாரத்தான் என்றழைக்கப்படும் 42.2 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயம் என மூன்று வகை களை கொண்ட இந்த டிரையத்தலான் போட்டியை தொடர்ந்து 17 மணி நேரத்துக்குள் முடிக்கும் முதல் நபருக்கு அயர்ன்மேன் எனப்படும் இரும்பு மனிதர் பட்டம் அளிக்கப்படும்.

இவ்வகையில், ஆஸ்திரியா நாட்டின் கிளாகென்பர்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டுக்கான டிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பங்கேற்றனர்.

இந்தப் போட்டிக்கான 3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுதல் 42.2 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயம் என அனைத்தையும் 14 மணி நேரத்துக்குள் முடித்த இந்திய ராணுவ தளபதி வி.டி.டோக்ரா அயர்ன்மேன் டிரையத்தலான் பட்டத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சமீபகாலமாக பணி நேரத்துக்கு பின்னர் கடுமையான பயிற்சிகளை மேற் கொண்டு சாதனை படைத்துள்ள டோக்ரா, உலக நாடுகளி லேயே இந்த பட்டத்தை வென்ற முதல் ராணுவ தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.


மேயர் சுட்டுக் கொலை

மணிலா, ஜூலை 4- பிலிப்பைன்சு நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டு பிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட் ரிகோ டுட்டட்ரே காவல்துறையினர் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந் துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் காவல்துறையினரின் தேடுதல் பட்டி யலில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மின்டா னாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட் டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner