எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஜூலை 4- மியான்மா நாட்டில் சிறுபான்மையினராக வசிக்கும் ரோகிங்யா இனத்த வர்கள் வங்காளதேசத்தில் அக திகளாக தஞ்சம் அடைந்துள் ளனர். இதுவரை சுமார் 7 லட் சம் பேர் அகதிகளாக பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அய்நா சபை  வலியுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத் தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோகிங்யா அகதிகளை அய்.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சந்தித்தார். அவரு டன் உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம், வங்காளதேசம் வெளியுறவு துறை அமைச்சர் மகமுது அலி, அய்நா சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி உள்பட பலர் உட னிருந்தனர். இதுதொடர்பாக குட்டரஸ் டுவிட்டரில் கூறுகை யில், ரோகிங்யா அகதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், வரும் மழைக் காலத்துக்குள் ரோகிங்யா அக திகள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என வும் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner