எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகம் முழுவதும் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த 'சேவ் தி சில்ரன்' (Save the Children) அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகில் உள்ள குழந்தைகளில் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் வறுமை, போர் அல்லது பெண் குழந்தை வன்புணர்வு ஆகிய ஆபத்துகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது.

120 கோடி குழந்தைகள் எண்ணிக்கை என்பது உலகக்குழந்தைகள் எண்ணிக்கையில் பாதி அளவு. இதில் 15 கோடி 30 லட்சம் குழந்தைகள் இந்த மூன்று ஆபத்துகளாலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று அந்த அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

100 கோடி குழந்தைகள் வறுமையாலும், 24 கோடி குழந்தைகள் போரினாலும், 57 கோடி 50 லட்சம் பெண் குழந்தைகள் வன்புணர்வு ஆகிய காரணங்களாலும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

"அவர்கள் யார், அவர்கள் எந்த இடத்தில் வசிக் கின்றனர் என்பதனாலேயே, இந்தக் குழந்தைகளின் குழந்தைப் பருவம் மற்றும் வருங்காலம் இன்று ஆபத்தில் உள்ளது. என்று அந்த அறிக்கை குறிப் பிடுகிறது.

இந்த அமைப்பு நடத்திய ஆய்வின்படி, 175 நாடுகளில், 95 நாடுகள் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டுள்ளன. ஆனால், 40 நாடுகள் மிகவும் அபாயகரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக் கின்றன. குழந்தை களின் உயிரிழப்பு, சத்துக் குறைபாடு, கல்வி, குழந்தைத் திருமணம் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு நாடுகள் தரம் பிரிக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், ஸ்லொவேனியா நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. கடைசி 10 இடங்களில் 8 நாடுகள் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள்.

இவர்கள் இந்த ஆபத்தில் இருக்க அவர்கள் காரணமில்லை. அவர்கள் வறுமையில் இருக் கிறார்கள். அவர்கள் போர் நடக்கின்ற பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் பெண் குழந்தைகளாகப் பிறந்திருக்கிறார்கள். இவைதான், இவை மட்டும்தான் காரணம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner