எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 31- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந் தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள். இதேபோல் இந்திய சிறைகளில் 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

2016ஆ-ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் 31 மீனவர் கள் உள்பட 114 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்தது. அதேபோல் 941 மீனவர்கள் உள்பட 951 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. சிறை கைதிகளுக்கான பாகிஸ்தான்- இந்தியா நீதித்துறை குழு 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த குழு 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குடியேற்ற சட்டம்: எதிர்க்கட்சி ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்க அரசை முடக்கி விடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

வாசிங்டன், ஜூலை 31- அமெரிக்காவில், குடியேற்ற சட்டங் களில் திருத்தம் செய்ய அதிபர் டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்ப தால், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல் லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங் களில் அடங்கும். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஜன நாயக கட்சி எம்.பி.க்கள், அவற்றுக்கு ஆதரவு அளிக்க மறுக் கிறார்கள்.

இந்நிலையில், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், சுவர் எழுப்புதல் உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடா விட்டால், நான் அரசை முடக்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.