எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோபல் பரிசு பெற்ற பிரபல  ஆங்கில இலக்கிய மேதையும், டிரினிடாட் என்ற தீவில் பிறந்த இந்திய வம்சாவளியினருமான வி.எஸ்.நைப்பால் அவர்கள் இலண்டனில் தமது 85 ஆம்வயதில் காலமானார் என்பதை அறிவிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவர் சுமார் 30 புத்தகங்களுக்குமேல் எழுதியுள்ளார். 1989 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் சென்னைக்கும் வந்து, நமது இயக்கம், தந்தை பெரியார், பெரியார் திடல், பெரியார் - அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு நமது கழகம் எனது தலைமையில் செயல்படுவதுபற்றியும் - தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புப்பற்றியும் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புபற்றியும் பலரையும் பேட்டி கண்டு, இந்தியாவில் பல லட்சம் கலகங்கள் ‘‘India a Million Mutinies Now'' என்ற அரிய ஆங்கில நூலை 1990 இல் எழுதி, வெளியிட்டு நமது இயக்கப் பணி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பின், எப்படியெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் சுமார் 20 - 25 பக்கங்களுக்குமேல் அந்நூலில் எழுதியுள்ளார்.

அவருக்கு, அதற்குப்பின் நோபல் பரிசு (வேறு ஒரு நூலுக்கு) கிடைத்தது. அவர் நேற்று (12.8.2018) லண்டனில் மறைந்தார் என்பது இங்கிலீஷ் இலக்கியத்திற்கும், இலக்கிய படைப்புலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவருக்கு நமது வீர வணக்கம்! அவருடைய குடும்பத்தா ருக்கும் ஆழ்ந்த இரங்கல்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

13.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner