எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 16- சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மய்யம் பார்கர் சோலார் புரோப் எனப்படும் விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது.

இதுவரை சூரியனை மிக அருகில் செல்லும் வகை யில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. ஒரு மணி நேரத்தில் 4 லட்சத்து 30 ஆயி ரம் மைல் கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது. இந்த ராக்கெட்டில் பொருத் தப்பட்டுள்ள பார்கர் விண் கலத்தில் ஒரு மெமரி கார்டு உள்ளது. அதில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களை பரிந்துரைக்க அறி வியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந் தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner