எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக. 19- உலகில் அதிக அளவிலான மக்கள் தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச் சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுமார் 20 லட்சம் படைவீரர்களை வைத் திருக்கும் சீனா, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பட் ஜெட்டில் அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் டிஜி போட்டி நாட்டில்  ராணுவ தளம் ஒன்றை அமைத்துள்ள சீனா, மேலும் சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவை குறிவைத்து அணுகுண்டுகளை வீசும் நோக்கத்தில் அதிநவீன போர் விமானங்களை உரு வாக்கி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக நெடுந்தூரம் சென்று தாக்கும் போர் விமானங்களை கடந்த மூன்றாண்டுகளாக மேம்படுத்திவரும் சீன ராணுவம் கடந்த ஆண்டில் மட்டும் ராணுவ மேம்பாட் டுக்காக சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்களை செலவழித் துள்ளதாகவும் பென்ட்டகான் சுட்டிக்காட்டியுள்ளது. டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

வாசிங்டன், ஆக. 19- அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் அவ்வப்போது ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையை தெரிவிப்பார். அந்த ஊடகம் மற்றும் அந்தச் செய்தியை எழுதிய செய்தியாளரை திட்டி தீர்த்த பின்னர்தான் அவர் அமைதி அடைவார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி நாளிதழ்கள், காட்சி ஊடகங்களை குறிப்பிட்டு பொய் செய்தி ஊடகம் என ட்வீட் செய்திருந்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் இத் தகைய ஊடகங்கள் அமெரிக்காவுக்கே தீங்கு எனவும் அவர் ட்வீட் செய்தார்.

இதற்கு, அமெரிக்க ஊடகங்கள் கடும் எதிர்வினை ஆற்றி யுள்ளன. அங்குள்ள சுமார் 350-க்கும் மேலான செய்தி நாளிதழ் கள் நேற்று டிரம்ப்பை விமர்சித்து தலையங்கம் வெளியிட்டு உள்ளன. அதிபரின் அறிக்கைகள், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும், செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கான பேச்சுரிமை இருப்பதே சிறந்த அமெ ரிக்கா என பாஸ்டன் குளோம் நாளிதழ் கூறியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், செய்தியாளர்களும் மனிதர்களே, அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தனக்கு எதிரான செய்தி வந்தால் பொய் என்பதும், செய்தியாளர்களை தாக்குவதும் எந்த வகையான ஜனநாயகம் என கூறப்பட்டுள்ளது.

டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner