எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அபுதாபி, ஆக. 19- கேரள மாநிலம் வெள்ளத்தால் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. கேரளாவுக்கு உதவ அய்க்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு ஒன்றை அமைக்க அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நக்யான் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய எமர்ஜென்சி குழுவை நியமித்து வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுமாறு தெரிவித்துள்ளார்.

அய்க்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷீத் அல் மகதூம் டுவிட் டரில் கூறும்போது, அய்க்கிய அரபு எமிரேட்சின் வெற்றிக்கு கேரள மக்கள் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வரு கிறார்கள் என்றார்.

கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அய்க் கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா உள் ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner