எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சர்வதேச வல்லுநர்கள் சார்பாக அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி உலகத் திலேயே மக்கள், மிகவும் குறைந்த பிரச்சினைகளோடு வாழும் நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகில் பொருளாதார ரீதியாய் வளர்ச்சி கண்ட ஜி20 நாடுகளில் கனடாவும் ஒன்று. பிரச்சினைகள் இல்லாத நாடு என்ற பெருமையோடு இன்னொரு பெருமையும் அந்த நாட்டுக்குக் கிடைத்துள்ளது. அந்தப் பெருமை என்னவென்றால் பெண்கள் வாழ சிறந்த நாடாகவும் கனடா விளங்குகிறது. பெண்களுக்கான பாலியல் தொந்தரவு என்பது கனடாவில் அரிதான ஒன்று. மேலும் கனடாவில் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் போன்றவை அறவே ஒழிக்கப்பட்டு விட்டது.

கனடாவுக்கு அடுத்தபடியாய் மகிழ்ச்சியான நாடுகள் எவை என்று பார்த்தால் அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு. வல்லரசு நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள அமெரிக்காவுக்கு, இந்த விஷயத்தில் 6ஆவது இடம் கிடைத்துள்ளது.

பிரச்சினைகள் நிறைந்த, பெண்கள் வாழ பாதுகாப்பற்ற சில நாடுகளை அந்தக் கணிப்புக்குழு அறிவித்துள்ளது. அந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.