எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பியாங்யாங், செப். 6- வடகொரியா நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர் ஜு கியு சாங். கடந்த 2009ஆ-ம் ஆண்டில் நெடுந்தூரம் சென்று தாக்கும் உன்ஹா--2, உன்ஹா--3 ஆகிய அதி நவீன ராக்கெட்களை தயாரித்து உலக நாடுகளை இவர் மலைக்க வைத்தார்.

பின்னர், அதிநவீன அணு ஆயுதங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தயா ரிக்கும் திட்டத்தை தொடங்கி அதற்கான பணிகளை ஊக்கு வித்தார். இதனால், 2013-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட தனிநபர் களில் ஒருவரான ஜு கியு சாங் கடந்த 2015ஆ-ம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், ‘பன்கைட் டோபேனியா’ (pancytopenia) என்னும் ரத்தத்தில் அணுக் களின் சமச்சீரின்மை நோயால் தாக்கப்பட்டிருந்த ஜு கியு சாங், தனது 89ஆ-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சிறந்த கல்வியாளரும், பேராசி ரியருமான அவரது மறைவுக்கு வடகொரியா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.