எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப். 8- வரலாறு காணாத மழையால் கேரளம் பேரழிவை சந்தித்துள்ள நிலை யில், அத்தகைய பருவநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று அய்.நா. பொதுச் செய லாளர் அன்டோனியோ குட் டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் எவ்வளவு வேக மாக மாறிவருகிறதோ அதைக் காட்டிலும் விரைவாக பருவ நிலை மாறிக் கொண்டிருப்ப தாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு இம்முறை கேரளத்தில் பருவ மழை தீவிரமாக பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளக் காடாக மாறியது. ஏறத்தாழ 370 பேர் உயிரிழந்தனர். லட்சக் கணக்கானோர் உடைமைகளை யும், உறைவிடங்களையும் இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தியாவின் தீவிர இயற்கை பேரிடராக அது அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று கலிபோர்னி யாவிலும், கனடாவிலும் வனப் பகுதியில் நேரிட்ட தீ விபத்தும் பல்வேறு சேதங்களை ஏற்படுத் தின. காட்டுத் தீயின் கோரப் பிடியில் அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகின. இந் நிலையில், 2018-ஆம் ஆண்டின் பருவநிலை பொருளாதார அறிக்கையை நியூயார்க் நகரில், அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது:

தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றமும், அத னால் ஏற்படும் எதிர்விளைவு களும் பெரும் சவாலாக விளங் குகின்றன. கேரள வெள்ள பாதிப்பாகட்டும், கலிபோர் னியா தீ விபத்தாகட்டும், அவை அனைத்துமே இயற்கை சீற்றங்களின் வெளிப்பாடு. இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் பேரழிவையும், பெருந் துன்பத்தையும் உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.

இத்தகைய பேரிடர்களில் அதிக பாதிப்புக்கு ஆளாவது பொருளாதாரத்தின் பின்தங்கிய வர்களும், சாமானிய மக்களும் தான். கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் இயற்கை பேர ழிவுகளில் சிக்கி ஆயிரக்கணக் கானோர் பலியாகினர். சுமார் 32,000 கோடி டாலர்கள் (ரூ. 22,79 லட்சம் கோடி மதிப்பி லான சொத்துகள் சேதமடந்தன.

இன்றைய சூழலில் உலகம் அதிவேகமாக உருமாறி வரு கிறது. ஆனால், அதை விட துரிதமாக பருவநிலை மாறி வருவது கவலைக்குரிய விச யம். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற் றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதில்லை. சுற்றுச்சூழல், பொருளாதாரம், அமைதி என அனைத்து விசயங்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது என்றார் அன்டோனியோ குட் டெரெஸ்.

இந்நிகழ்வில், சர்வதேசத் தலைவர்களும், அய்.நா. பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner