எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 8- அமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் - 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார்.

அவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் தற்போது 140 முதல் 150 அணுகுண்டுகள் வரை இருக்கலாம். இதே வேகத்தில் அந்த நாடு போய்க்கொண்டு இருந்தால், 2025ஆம் ஆண்டுவாக்கில் அந்த நாட்டிடம் 220 முதல் 250 அணுகுண்டுகள் வரை சேர்ந்துவிடும். இது நடந்துவிட்டால், பாகிஸ்தான் உலகின் 5-ஆவது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும்” என கூறி உள்ளனர்.

பாகிஸ்தான் எத்தனை அணுசக்தி திறன் கொண்ட லாஞ்சர்களை நிறுத்துகிறது, இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாடு அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இங்கிலாந்து துறைமுகத்தில் உள்ள

இந்திய கப்பல் ‘மாளவியா’ விற்பனை

லண்டன், செப். 8- மும்பையைச் சேர்ந்த ‘ஜிஓஎல் ஆப்ஷோர்’ என்ற நிறுவனத்திடம் மாளவியா 20, மாளவியா 7 என்ற இரு சரக்கு கப்பல்கள் இருந்தன. ‘மாளவியா 20’ இங்கிலாந் தின் யார்மவுத் துறைமுகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் நிற்கிறது. இக்கப்பலின் கேப்டன் நிகேஷ் ரஸ்தோகி மற்றும் 3 ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த கப்பலை விற்பனை செய்வதற்கான அனுமதி உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறு வனம் கடந்த மாதம் பெற்றது.

இதற்கான டெண்டர் வரும் 12ஆம் தேதி விடப்படுகிறது. இது அந்த கப்பலின் கேப்டன் ரஸ்தோகி மற்றும் ஊழியர்க ளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதுகுறித்து ரஸ்தோகி அளித்த பேட்டியில், ‘‘இந்த கப்பலின் விற்பனை நடவடிக்கைகள் முடிவடைந்தால்தான் நாங்கள் மும்பை திரும்பி எங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியும். இது மிகப் பெரிய நிம்மதி’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner