எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, செப். 8- இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது தமிழர்கள் பலர் காணாமல் போனது தொடர்பான குற்றச் சாட்டுக்கு உள்ளான அதிகாரி களுக்கு விசாரணை முடியும் வரை பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்டவை கூடாது என்று விசாரணைக் குழு பரிந் துரைத்துள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு அந்நாட்டு ராணு வத்துக்கும் விடுதலைப் புலி கள் இயக்கத்துக்கும் இடையி லான போர் முடிவுக்கு வந்தது. அப்போது, ஏராளமான தமி ழர்கள் முக்கியமாக தமிழ் இளைஞர்கள், ராணுவத்தினரி டம் சரணடைந்தனர். ஆனால், இவர்களின் பலரது நிலைமை என்ன ஆனது என்பது தெரிய வில்லை. மேலும், போர்க் காலத் தில் ஏராளமான தமிழர்கள் காணாமல் போனதாகவும் குற் றச்சாட்டு உள்ளது. இதைய டுத்து, காணமல் போனவர்கள் குறித்து உறவினர்கள் புகார் அளிக்க உண்மை கண்டறியும் புலனாய்வு அமைப்பு உருவாக் கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக் குழு பரிந்துரை அளிக்க இருக் கிறது. இந்நிலையில் இக்குழு தனது இடைக்கால அறிக் கையை இலங்கை அரசிடம் புதன்கிழமை அளித்தது. அதில், போரின் போது காணமல் போனவர்கள் தொடர்பாக குற் றச்சாட்டுக்கு உள்ளான அதிகா ரிகளுக்கு பதவி உயர்வு, பணி யிட மாற்றம் போன்றவற்றை அளிக்கக் கூடாது. ராணுவம், காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் என அனைத்துப் பிரிவினருக்கும் இது பொருந் தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்ட போருக்குப் பிறகு 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணா மல் போய்விட்டதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதனை விசாரிக்க கடந்த பிப்ரவரி மாதம் உண்மை கண்டறியும் புலனாய்வு அமைப்பு உருவாக் கப்பட்டது.


ஈராக் போராட்டத்தில் வன்முறை: 3 பேர் பலி, 24 பேர் படுகாயம்

பாக்தாத், செப். 8- ஈராக் நாட்டில் நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பாஸ்ரா நகரில் கடந்த திங்கள் அன்று உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக் கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர் களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக அமைதியாக தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்புப்படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டு களையும் வீசினர்.

பதிலுக்கு போராட்டக்காரர் கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்ணீர்ப்புகை குண்டு களை வெடித்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுட்டனர்.

இந்த மோதலில் போராட் டக்காரர்கள் 8 பேர் உயிர்ழந் தனர். பாதுகாப்பு படையினர் 10-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட தொடங்கினர். பாஸ்ரா நக ரில் உள்ள அரசு அலுவலகங்க ளுக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. பெரும் பாலான சாலைகளையும் துண் டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வன்முறை காரணமாக பாதுகாப்புப்படையினரால் நேற்று அங்கு ஊரடங்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னரும் போரட்டங்கள் நடை பெற்றதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்களில் 3  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், போராட்டக்காரர் கள் 14 பேர், பாதுகாப்புப் படையை சேர்ந்த 10  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வன்முறை காரணமாக அப்பகு தியே போர்க்களமாக காட்சி யளிக்கிறது.