எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, அக்.10, இலங் கையில் பிரதமர் ரனில் விக்ர மசிங்கே தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை அமைச் சராக இருந்தவருமான விஜய கலா மகேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந் தவர்.

இலங்கையின் ஒரே தமிழ் பெண் அமைச்சரான இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி யாழ்ப்பா ணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரை யாற்றினார்.

அவர் பேசுகையில், பெண் களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ‘வடக்கு மாகாணத்தில் தற்போது அதி கரித்து வரும் குற்ற சம்பவங் களை பார்க்கும் போது, விடு தலைப்புலிகள் இயக்கம் மீண் டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’  நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நட மாட வேண் டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக் குச் சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது என்றார்.

விஜயகலாவின் இந்த கருத் துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அரசியல் சட்டத்துக்கு எதி ராக பேசிய அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.  பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப் பட்ட ஒரு அமைப்புக்கு ஆதர வாகப் பேசிய விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. கட்சிலும் எதிர்ப்பு வலுக்கவே விஜயகலா தனது பதவியிலிருந்து விலகி னார்.

இதற்கிடையே இவ்விவ காரம் தொடர்பாக விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் காவல்துறையினர் விசாரணைக் கும் உத்தரவிடப் பட்டு, அட் டார்னி ஜெனரல் கருத்தும் கேட்கப்பட்டது.

இந்நிலையில், குற்ற தடுப்பு காவல்துறையினர் விஜயகலாவை நேரில் ஆஜரா கும்படி அழைப்பு அனுப்பினார்கள். அதன்படி காவல் துறையினர் முன்பு ஆஜ ரான விஜயகலா தனது வாக்கு மூலத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய் யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner