எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜார்ஜியா, அக். 30- முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்த நாட்டில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் கடைசி தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முறையை அமல் படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம், 2010ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அமல்படுத் தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடைசி முறையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நேரடி அதிபர் தேர்தலில், 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எனினும், தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின்படி இந்த 25 பேரில் யாருக்கும் முதல் சுற்றிலேயே வெற்றி பெறுவதற்குப் போதுமான பெரும் பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது.

முதல் சுற்றிலேயே 50 சதவீத வாக்குகளைப் பெற்று யாரும் வெற்றி பெறவில்லை என்றால், அடுத்தக்கட்ட தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறும்.

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து:

சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்வு

பீஜிங், அக். 30-  சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடை பிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத் துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20-ஆம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரு நுழைவு வாயில்களும் மூடிக்கொண்டன.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் உயிரிழந்திருந்தனர். மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் நேற்றுறு மேலும் இருவரது உடல்களை கண்டெடுத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner