எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டப்ளின், அக். 30- அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட் டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட் டனர். இந்த தேர்தலில் பதி வான ஓட்டுகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் 55.8 சதவீத ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-ஆவது முறையாக அதிபராக தேர்வு பெற்று இருக்கிறார். 1966-ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அதிபர் ஒருவர் தொடர்ந்து 2-ஆவது முறை போட்டியிட் டது இதுவே முதல் முறை.

அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தொழில் அதிபரான பீட்டர் கேசி 23.25 சதவீத ஓட்டுகளையும், சியான் கலாகெர் 6.41 சதவீத ஓட்டு களையும் பெற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner