எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க்,  நவ.5 மனித உரிமை மீறல்களின் உச்சகட்டமே பயங்கரவாதம் எனவும், அது எல்லை கடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது எனவும், பயங்கர வாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டு பணியாற்ற வேண்டும் எனவும் அய்.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரி லுள்ள அய்.நா. பொதுச் சபையில், மனித உரிமைகள் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட அய்.நா.வுக்கான இந்தி யாவின் நிரந்தரக் குழுவின் முதன்மை செயலர் பாலோமி திரிபாதி கூறியதாவது:

மனித உரிமைகள் குழுவின் செயல் பாடுகள் முன்பிருந்ததை விட தொய் வடைந்திருப்பது கவலையைத் தருகிறது. அக்குழுவின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களின் உச்ச கட்டமே பயங்கரவாதம். தற்போது, எல்லைகளைக் கடந்து பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது. அனைத்து விதமான பயங்கரவாதங்களையும் ஒழித்து, பொது மக்களின் உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒருங் கிணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுத்து, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே நாடுகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாடுகளில் எடுக் கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்த நாடுகளிடம் கலந்தாலோசிக் காமல் முடிவுகளை எடுப்பதும், மனித உரிமைகள் மீறலுக்குச் சமமாகும். அத்த கைய முடிவுகள் தகுந்த பலனைத் தராது.

மனித உரிமைகள் குழு, வலிமையுட னும், பாரபட்சமின்றியும், அடிப்படை விதிகளுடனும், வெளிப்படைத்தன்மை யுடனும் செயல்பட வேண்டும். மேலும், குழு செயல்படும் முறைகள் எளிமை யாக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் குழுவானது, தனது நிதியைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நிதிக்காக பல்வேறு தன்னார்வ நிதி மூலங்களை நம்பியிருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மரபியல், செயற்கை நுண்ணறிவு, இணையவழி அவதூறு பிரச்சாரங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங் களால் மனித உரிமைகள் பாதிக்கப் படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது குழுவின் அடிப்படைக் கடமையாகும்.

மனித உரிமைகள் குழுவோடு இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் வடமேற்கே நிலநடுக்கம்

பெய்ஜிங், நவ.5 சீனாவின் வடமேற்கே கிஜில்சு கிர்கீஸ் பகுதியில் நேற்று காலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 22 கி.மீட் டர் ஆழத்தில் மய்யம் கொண் டுள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

மீண்டும் அணு ஆயுதம் தயாரிப்போம் வடகொரியா மிரட்டல்

சியோல், நவ.5 தங்கள் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொள்ளா விட்டால், அணு ஆயுதத் தயாரிப்பை மீண்டும் தொடங் கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத் துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்  கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக நாங்கள் அறிவித்த பின்ன ரும், எங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தொடருமானால், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொண்டு, அணு ஆயுத பலத்தையும் மேம்படுத்தும் எங்களது பியாங் ஜின் கொள்கையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், வடகொரியாவுக்கும், அமெரிக்க- தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட் டது.

அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்- உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வடகொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக் காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள் வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner