எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரிஸ், டிச. 5- பிரான்சில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நடை பெறும் போராட்டங்களில் அதிகரிக்கும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற் காக, அவசர நிலை அறிவிக்கும் திட் டம் தற்போதைக்கு இல்லை என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனியார் வானொலியில் உள்துறை இணையமைச்சர் லாரென்ட் நியூனெஸ் திங்கள் கிழமை கூறியதாவது:

மஞ்சள் அங்கி போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அவசர நிலை அறிவிக்கும் திட்டம் அரசிடம் தற்போதைக்கு இல்லை.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதற் கான பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். எனினும், அந்தப் பட்டியலில் அவசர நிலை அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை என்றார் அவர்.

பிரான்சில் வாகன எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதற்கும், அந் தப் பொருள்களுக்கான வரியை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட் டம் நடைபெற்று வருகிறது.

எதிர்ப்பின் அடையாளமாக, ஒளி ரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், மூன்றாவது வார மாக கடந்த 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மிகவும் தீவிரமடைந்தது.

அப்போது நடைபெற்ற போராட்டங் களின்போது தீவைப்பு போன்ற வன் முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன.

இதில், 23 பாதுகாப்புப் படையினர் உள்பட 133 பேர் காயமடைந்தனர். இந்தப் போராட்ட வன்முறை தொடர் பாக இதுவரை 412 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.

இதையடுத்து, எந்தக் காரணத்துக் காகவும் வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று பிரான்சு அதிபர் இமானுவல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், வன்முறையைக் கட்டுப் படுத்துவதற்காக காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று அவசர நிலையை அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருவ தாக உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் கேஸ்டனெர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உள்துறை இணை யமைச்சர் லாரென்ட் நியூனெஸ் தற் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner