எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரிஸ், ஜன. 10- முன் அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப் பாட்டங்களுக்குத் தடை விதிக்க பிரான்சு அரசு முடிவு செய்து உள்ளது. அந்த நாட்டில் அரசுக்கு எதிராக நடந்து வரும் மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பிரான்சு பிரதமர் எடுவர்ட் பிலிப்  கூறியதாவது: போராட்டங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. மேலும், அங்கீகாரம் பெறாமல் ஆர்ப் பாட்டங்கள் நடத்துவதும் விதிகளுக்கு முரணானது ஆகும்.

எனவே, இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், அதிபர் இமானுவல் மேக்ரானின் சலுகை அறிவிப்புக்குப் பிறகு சற்று தீவிரம் குறைந்தாலும், இந்த வாரம் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன. இந்தச் சூழலில், பிரான்சு பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் பதவி ஏற்றார்

வாசிங்டன், ஜன. 10-  189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம் (அய்.எம்.எப்.) அமெரிக்கா வின் வாசிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்து ழைப்பு, நிதி நிலைத்தன்மை, சர்வ தேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக் கிய பணிகளாகும்.

இந்த அமைப்பின் 11-ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக் கும் இந்திய பெண் கீதா கோபிநாத் (48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

கடந்த 1ஆம் தேதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ஆம் தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக் கப்பட்டார்.

தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கருநாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்- - விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்- அமைச்சர் பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner