எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஜன.11 நாசா அனுப்பிய டெஸ் செயற்கைக்கோள் சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாசா விண்வெளி ஆய்வு மய்ய மானது, டெஸ் என்ற செயற்கைக் கோளை சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிய அனுப்பியது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நட்சத் திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி தன்னுடைய ஆய்வை தொடங்கியது.

இந்நிலையில், சூரிய குடும் பத்திற்கு வெளியே புதிய கிரகம் ஒன்றை இந்த செயற்கைக்கோள் கண்டு பிடித்துள்ளது. இது டெஸ் கண்டுபிடித்த 3-ஆவது கிரகம் ஆகும். இந்த கிரகம் மற்ற 2 கிரகங்களை ஒப்பிடும்போது, 36 நாட்களில் நிதானமாக நட்சத் திரத்தை சுற்றி வருகிறது.

இந்த கிரகத்திற்கு எச்.டி. 21749பி என நாசா பெயரிட்டுள்ளது. இதன் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் இருப்பதும், நட்சத் திரத்திற்கு அருகாமையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள் ளது. இது பூமியைப் போல மூன்று மடங்கு பெரியது. ஆனால் சூரியனைப் போல பிரகாசமான நட்சத்திரப்பகுதியில் உள்ள மிகச் சிறிய கோள் இது என அமெரிக்க எம்.அய்.டியின் டையானா ட்ராகோமிர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த கிரகம் குறித்து கூறுகையில், கிரகங்களின் வளிமண்டலங்கள் குறித்து நமக்கு நன்றாக தெரியும். ஆனால், சிறிய அளவிலான கிரகங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் நட்சத்திரங்களிலி ருந்து தொலைவில் இருக்கும் வளிமண்டலப் பாதைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் இந்த சிறிய, குளிரான கிரகங்களைப் பற்றி நம்மால் அதிகம் அறிய முடியவில்லை.ஆனால், தற்போது  ஒரு சிறிய மற்றும் குளிரான கிரகம் கிடைத் துள்ளது என தெரிவித்துள்ளார்.

சுமார் 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிறு நட்சத்திரங்களை கடந்து டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner